சென்னை: ஒப்பந்த பணியாளர்களுக்கு மகப்பேறு சலுகை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நிரந்தர பணியாளர் அல்ல எனக்கூறி பெண்ணுக்கு மகப்பேறு சலுகை வழங்க மறுக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். தனிநீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது.
