டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் விதிமீறல் நடைபெற்றதாக எழுந்த புகாரில், மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று தலைமை செயலகத்தில் உள்ள மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.
சிபிஐ தனது அலுவலகத்திற்கு மீண்டும் வந்திருப்பதாகவும், அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்றும் சிசோடியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.