பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் முன்பதிவு செய்வது எப்படி…? முழு விவரம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜன. 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இது தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் பழனியில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தின் போது, ஜனவரி 27ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிவரை கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும், கும்பாபிஷேகத்தை காண மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படும பக்தர்கள் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் மலை கோவிலுக்கு சென்றுவிட வேண்டும் என்றும், ரோப் கார் மற்றும் வின்ச் ஆகியவற்றில் 2000 பேரும் படிவழிப்பாதை வழியாக 4 ஆயிரம் பேர் என மொத்தம் 6ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலுக்கல் முறையில் தேர்வு

கும்பாபிஷேகத்தை காண விரும்பும் பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 3000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்கு முன்பதிவு செய்யும் முறையை கோவில் நிர்வாகம் அறிவித்தது. அதாவது, குடமுழுவுக்கு விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், திருக்கோயில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் வலைதலமான www.hrce.tn.gov.in ஆகியவற்றின் மூலம்  ஜன. 20 வரை கட்டணமில்லா முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் முன்பதிவு செய்ய அரசால் வழங்கப்பட்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து தங்களது கைப்பேசி எண்ணுடன் (Mobile Number) மின்னஞ்சல் முகவரி இருப்பின் (E-Mail Id) விவரம் தந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.