
தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்கின்றனர்.
சென்னையில் தங்கி வேலை செய்பவர்கள் படிப்பவர்கள் என அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டு இருக்கின்றனர்.

இதனால் அதிகப்படியான வாகனங்கள் குரோம்பேட்டை – தாம்பரம் பெருங்களத்தூர் பகுதிகளை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலில் சரி செய்ய போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
newstm.in