எனக்கு 'துணிவு' பொங்கல் – மகிழ்ச்சியில் மஞ்சு வாரியர்

இனிக்கும் வெல்ல சிரிப்பில் பொங்கிடும் சர்க்கரை பொங்கல்… அதிகாலை இளஞ்சூரியனை சுண்டி இழுக்கும் மேகக்கண்கள்… தோகை கூந்தலில் ஆடும் மணக்கும் மலர் செண்டுகள்… என அழகும், ஆக் ஷனும் சங்கமிக்க 'துணிவு' பொங்கல் கொண்டாடும் நடிகை மஞ்சு வாரியார் மனம் திறக்கிறார்…

இது உங்களுக்கு ஸ்பெஷல் பொங்கல் போல?
பண்டிகைகளை பெரிய அளவு கொண்டாடியதில்லை. பண்டிகை காலங்களில் என் பிற மொழிபடங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. தமிழில் 'துணிவு' படத்தில் அஜித் உடன் நடித்ததில் பெருமை. மலையாளத்தில் 'ஆயிஷா' ரிலீஸ் ஆகுது.

'துணிவு' படத்தில் ஆக் ஷன் காட்சிகளில் நடித்தது…
இயக்குனர் வினோத் போன் செய்து என் படத்தில் நடிக்கலாமான்னு' கேட்டார். உடனே ஓ.கே., சொன்னேன். இதுவரை ஆக் ஷன் படங்களில் நடிக்காததால் பயிற்சிக்கு பெற்று நடித்தேன். துப்பாக்கி பிடிக்க அஜித்தான் கற்றுக்கொடுத்தார். வினோத், அஜித் காம்பினேஷனில் நடித்ததில் சந்தோஷம்.

அஜித் உடன் லடாக் சென்றது, படத்தில் காதல் காட்சி…?
பாக்கியமாக நினைக்கிறேன். அவர் பைக் பயணத்தை சண்டிகரில் துவங்கி மணாலி, லே, லடாக் வரும் போது தான் அவருடன் நான் இணைந்தேன். நிறைய பயண அனுபவங்களை பேசினோம். ஆக் ஷன் படம் என்பதால் காதல் காட்சிகள் இல்லை.

17 ஆண்டுகளில் 40 தானா…
'துணிவு' வரை நல்ல எழுத்தாளர்கள், இயக்குனர்கள், நடிகர்களுடன் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த படமான 'ஆயிஷா' சர்வதேச படம்… இலங்கை, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், அரேபிய நாடுகளில் உள்ளவர்கள், அவரவர் மொழி பேசி இதில் நடித்துள்ளனர். நான் அரபி பெண்ணாக நடிக்கிறேன்.

அஜித், தனுஷ் பற்றி…
அஜித் எளிமையானவர். எல்லோரையும் மதிப்பவர். மனதில் பட்டதை சொல்பவர். இன்னும் நான் கீழே இறங்கி வரணும்னு அவரை பார்த்து கற்றுக்கொண்டேன். தனுஷ் கடின உழைப்பாளி. அவரிடம் உழைப்பைக் கற்றேன்.

அடுத்தது அரசியலா
தேர்தல் வரும் போதெல்லாம் மஞ்சு இந்த கட்சியில் இருக்கிறார், அந்த கட்சியில் சேருகிறார் என செய்தி வரும். எனக்கு அரசியல் ஆசை இல்லை.

சென்னை வந்தா என்ன சாப்பிடுவீங்க…?
சென்னையில் கொத்து பரோட்டா, இட்லி, தோசை, வடகறி விரும்பி சாப்பிடுவேன். இங்கு நட்பு வட்டம் குறைவு தான். நல்லது கெட்டது சொல்லி தர சில பிரண்ட்ஸ் இருக்காங்க.

மலையாள சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் என்று உங்களுக்கு ஒரு பெயர் இருக்கே?
அதை எல்லாம் நான் நம்பல.. நான் பண்ற வேலையில நேர்மையா இருக்கணும் சின்சியரா இருக்கணும்..100 சதவீதம் உழைக்கணும் அது தான் எனக்கு எப்பவுமே ரொம்ப முக்கியம்.. இந்த டேக்ஸ் எல்லாம் நான் நம்ப மாட்டேன் ஏன்னா இது எல்லாமே தற்காலிகமானது.. அதேசமயம் அன்புனால சில பேர் என்ன இப்படி நினைக்கலாம்.. நான் நல்ல நடிகை என்று பேர் வாங்கினாளே போதும்

பெண்களுக்கு எது சந்தோஷம் என்று நினைக்கிறீங்க?
ஆண் பெண் என்று வேறுபடுத்தி நான் பார்க்க முடியல..அது அவரவர் பர்சனல் சாய்ஸ்

லூசிபர் 2ம்பாகம் எம்புரான்லயும் நடிக்கிறிங்களா?
நானும் படத்தில் இருக்கேன்னு சொல்லி இருக்காங்க.. இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கல..

மலையாளத்தில் மோகன்லாலுக்கு பிறகு எந்த நடிகருடன் நடிப்பது கம்பர்டபிலா கருதுவீங்க?
எல்லார் கூடவும்தான் நான் மம்முட்டி கூட 1 படம் தான் வேலை பார்த்தேன்.. இதுவரை எனக்கு எல்லாருமே கம்பர்டபுளா தான் இருந்திருக்காங்க

மலையாளத்துல யார் கூட நீங்க நடிக்காம மிஸ் ஆனீங்க?
ஜெகதீஸ்ரி குமார் கூட நான் நடிக்கல.. இப்போது அவங்க உடம்பு முடியாம இருக்காங்க… அந்தநேரத்தில் எனக்கு இவங்ககூட நடிக்கவாய்ப்பு கிடைக்கல

ஒருவேளை சினிமாவுக்கு வரலைன்னா எந்த துறையை தேர்ந்து எடுத்து இருப்பிங்க?
நான் என்ன ஆகிருப்பேனு நினைச்சே பார்க்க முடியல. நிச்சயம் டாக்டர், இன்ஜினியர் ஆகிருக்க மாட்டேன். சின்ன வயசுல சினிமா பார்க்கும்போது போலீஸ் ஆபிசர் ஆகனும்னு இருந்தது. எனக்கு சின்ன வயசிலே இருந்து டிராவல் பிடிக்கும். யங் ஏஜ்-ல ஏரோஸ்டர் ஆக விரும்பினேன்,அது முடியல… இந்த சினிமா துறையிலும் நிறைய பயணங்கள் இருப்பதால் நான் ஹேப்பி.

உங்க நட்பு வட்டம் எப்படி?
ரொம்பக் குறைவு தான். எனக்கு ஹானஸ்ட்டா நல்லது கெட்டது சொல்லித் தர சில ப்ரண்ட்ஸ் இருக்காங்க.. என் அம்மா அண்ணன் யாரா இருந்தாலும் நான் எது செய்தாலும் முகத்துக்கு நேரடியா சொல்லுவாங்க.. அது என்னோட பலம்னு நினைக்கிறேன்

ஆசை கனவு என்ன?
அப்படி கனவு கண்டு வாழ்றவ நான் இல்ல.. வாழ்க்கை எப்படி போகுதோ அதன் போக்குலே போறவ.. திட்டமிடாம நிறைய நடக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.