சென்னை: தன்னை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்த தொண்டர்களுக்கு ரூ.100 தாளை பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக தொண்டர்கள் வாழ்த்து பெறுவது வழக்கம். இந்த ஆண்டும் பொங்கல் திருநாள் அன்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க திமுக தொண்டர்கள் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு வந்தனர்.அவர்களிடம் பொங்கல் வாழ்த்துக்களை பெற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.100யை தொண்டர்களுக்கு பரிசாக வழங்கினார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்தபோது […]
