வா மோதிக்கலாம்.. ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலைக்கு எதிராக போட்டி? காயத்ரி ஓபன் சேலஞ்ச்

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்னும் 6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் களம் இறங்க முடிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், ஈபிஎஸ் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை குறித்து சலசலப்புகள் இருந்து வருகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இருக்கும் மறைமுக போட்டி எனவும் பேசப்படுகிறது.

ஈரோடு இடைத்தேர்தலை
எடப்பாடி பழனிசாமி
பாஜகவுக்கு விட்டு கொடுக்கும் நிலைப்பாடுகளை எடுப்பார் என்றும் கட்சியை காப்பாற்ற எடப்பாடி எடுக்கப்போகும் முடிவாக அது இருக்கும் என்றும் ஒரு தகவல் உலா வருகிறது. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போர் கோடி தூக்கி கட்சியை விட்டு வெளியே வந்துள்ள நடிகை காயத்ரி ரகுராம் தற்போது பாஜக கட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார்.

பெண்களுக்கு பாதுகாப்பு தராததற்காக ஜனவரி 27ம் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் செல்ல உள்ளேன் என்றும் யார் வேண்டுமானாலும் என்னுடன் இணைந்து பயணம் செய்யலாம் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலை குறிப்பிட்டு அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது; ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடு ஆ என்று பார்ப்போம்” என இவ்வாறு சவால் விட்டு பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.