உதகை தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா! நடனத்தால் அசத்திய படுகரின மக்கள்!

தமிழகம் முழுவதும் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கலை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சுற்றுலா நகரமான நீலகிரியிலும் பல பகுதிகளில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. செங்கரும்பை வைத்து மண்பானையில் பொங்கல் பொங்க பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சியுடன் கோஷமிட்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

அதையடுத்து பொங்கல் விழாவில் பரதநாட்டியம் பழங்குடியின மக்களான தோடர் இன மக்களின் பாரம்பரிய நடனம், படுகரின மக்களின் நடனம் நடைபெற்றது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் தோடர், படுகரின மக்களின் நடனங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

படுகர் இன மக்கள் நடனமாடும் பொழுது சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு படுக மொழி பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். பின்பு சுற்றுலா பயணிகளுக்கு லெமன் இந்தி ஸ்பூன் மியூசிக்கல் சேர், போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் உற்சாகமாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த பொங்கல் விழா போட்டிகளில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள் கூறுகையில் பொங்கல் விடுமுறைக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை புரிந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பொங்கல் விழா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதும் பூங்காவை குடும்பத்துடன் கண்டு ரசிப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.