தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. திருச்சி மாவட்டத்தை அடுத்த பெரிய சூரியூரில் இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியைத் துவக்கி வைத்தார்.
திருச்சி சூரியூரியில் ஜல்லிக்கட்டு விழாவில் 600 காளைகள் பங்கேற்க உள்ளன. சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 400 வீரர்கள் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். இன்று காலை 8 மணி முதல் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த அரவிந்த் என்பவர் மாடு முட்டியதில் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்த கண்ணக்கோன் பட்டியைச் சேர்ந்த அரவிந்தன் திருச்சி பெரிய சூரியூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்துள்ளார்.
அப்பொழுது மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்த அரவிந்த் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அரவிந்த் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.