பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வட்டத்தில் பழைய அரசமங்கலம் எனும் கிராமம் அமைந்துள்ளது இந்த கிராமத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பெயரில் பழைய அரசமங்கலம் கிராமத்திற்கு மங்களமேடு போலீசார் சென்று பார்த்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த 33 வயது கொண்ட மகாராஜன் என்பவரை கைது செய்தனர்.
அவருடைய வீட்டில் ஆய்வு செய்தபோது அங்கு 25 லிட்டர் நாட்டு சாராயம் ஊறலும், 18 லிட்டர் நாட்டு சாராய தேனும் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது