யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்


யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண சபை விவசாய அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாகம் சேவையில் மூத்த அதிகதரியான அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மட்டக்களப்பு, கொழும்பு வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றியவர்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

2013ஆம் ஆண்டு தொடக்கம் வட மாகாண சபையில் பேரவை செயலாளராகவும் பிரதிப் பிரதம செயலாளராகவும் மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளராகவும் கடமையாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன்,  இறுதியாக மாகாண சபை விவசாய அமைச்சின் செயலாளராகம் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம் | Jaffna District Government President



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.