ஆரோக்கிய தயாரிப்புக்கள் பாரிய கிராமிய திட்டத்தை இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தவிருப்பதாக மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனூப பஸ்குவெல் தெரிவித்தார்.
மேற்கொள்ளப்படும் உற்பத்திகளின் கீழ் செயற்படும் பொருளாதாரத்தை To create a functioning economy உருவாக்கவுள்ளதாக கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றிய போது இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஒரு புதிய கிராமம் – ஒரு புதிய நாடு திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கண்டி மாவட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அண்மையில் கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது சுபீட்ச அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் நான்கு இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட சபீட்ச வங்கி செயற்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தை சுபீட்ச வங்கியானது 40மில்லயன் ரூபா கடனை உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை உற்பத்தித்திறன் மிக்க பொருளாதாரமாக அமுல்படுத்தியுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.
சுயமுயற்சியாளர்களுக்காக சுபீட்சம் பிரிவினால் மேற்பார்வை செய்து 04 – 14 வீத நிவாரணக் கடன், வட்டிக் கடன் என்பன அமுல்படுத்தப்படடு, சிறிய மற்றும் நடுத்தர சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் பல நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் 43 சௌபாக்கியா கிராமங்கள் செயற்படுகின்றன. அவை இந்த வருடமும் தொடர்ந்து செயற்படுவதுடன் இக்கிராமங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்கு அந்நாட்டு மக்களின் அர்ப்பணிப்புக்கள் அவசியமானது என்பதைத் தான் அவதானித்திருப்பதாகவும் விபரித்தார்.
இந்நிகழ்வில் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலக் குணதிலக ராஜபக்ஷ, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், மேலதிக மாவட்ட செயலாளர் உத்பலா ஜயரத்ன, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ரம்யா விஜேசுந்தர உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Fathima Nasriya