இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான இளவரசி கேட்டும் மிகப்பெரிய தவறு ஒன்றைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப விமர்சகர் ஒருவர்.
ராஜாக்களும் ராணிகளும் கலந்துகொண்ட ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி
நேற்று முன்தினம், கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் ஐந்து ராஜாக்கள், எட்டு ராணிகள், 13 இளவரசர்கள் முதல் ஏராளமான ராஜ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சி ஒன்றிற்காக கூடியிருந்தார்கள்.
சென்ற ஆண்டு பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்கிற்குப் பிறகு இதுதான் மிகப்பெரிய ஒரு நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.
அது, கிரீஸ் மன்னர் இரண்டாம் கான்ஸ்டான்டைனின் இறுதிச்சடங்கு.

Private Office of HM King Constantine//Getty
இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் செய்த மிகப்பெரிய தவறு
இப்படி ஏராளம் ராஜாக்களும் ராணிகளும் பங்கேற்ற இறுதிச்சடங்கில் வில்லியமும் கேட்டும் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலாக அதிகம் அறியப்படாத, அரியணையேறும் வரிசையில் 55ஆவது நபராக இருக்கும் Gabriella Kingston என்னும் பெண் வில்லியம் சார்பில் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வார் என கென்சிங்டன் மாளிகை வட்டாரம் அறிவித்தது.

Picture: CBS
இது இளவரசர் வில்லியம் செய்த மிகப்பெரிய தவறாக கருதப்படுகிறது என்றால், மன்னர் இரண்டாம் கான்ஸ்டான்டைன்தான் இளவரசர் வில்லியமுடைய ஞானத்தந்தை!
ஆக, இளவரசர் ஹரி தனது புத்தகத்தில் ஏற்கனவே இளவரசர் வில்லியமை அவர் சோம்பலாக இருக்கிறார் என்னும் ரீதியில் விமர்சித்துள்ள நிலையில், வில்லியமும் கேட்டும் வில்லியமுடைய ஞானத்தந்தையான மன்னர் இரண்டாம் கான்ஸ்டான்டைனுடைய இறுதிச்சடங்கில் பங்கேற்காதது, ஹரியின் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிப்பது போலாகிவிடும், ஆனால், வில்லியம் கேட் செய்த இந்த மிகப்பெரிய தவறை யாருமே கண்டுகொள்ளவில்லை என்கிறார் ராஜ குடும்ப விமர்சகரான Daniela Elser.

Picture: Jon Super-WPA Pool/Getty Images

Picture: Nikolas Kominis/AFP

Picture: Milos Bicanski/Getty Images

Picture: Jonathan Buckmaster/AFP

Picture: Jon Super/AFP