சென்னை: எஸ்.எஸ்.ஐ. பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் தலைமைக் காவலராக பணியாற்றி இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த ராமசாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் காவல்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய தனக்கு சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.