சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் கூடுதல் சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில், 2.66 லட்சம் பேர் பயணம் செய்து சாதனை படைத்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கமும் ஜரூராக நடைபெற்று வருகிறது. இன்னும் 10 ஆண்டுக்குள் சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரயில் சேவை நடைபெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடக்க காலத்தில் மக்களிடம் வரவேற்பை பெறாத மெட்ரோ ரயில், தற்போது சென்னைவாசிகளின் […]