சென்னை: தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி தேவை என திமுக எம்எல்ஏ கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். கர்நாடகா உள்பட சில மாநிலங்களுக்கு தனிக்கொடி இருக்கும்போது, தமிழ்நாட்டுக்கும் தனிக்கொடி தேவை என கூறியுள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி அவசியம்’ என மறைந்த சி.பா.ஆதித்தனர், முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட பலர் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் திமுக எம்எல்ஏ கருணாநிதி, தனிக்கொடி என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும்பான்மை எண்ணிக்கை பலத்தோடு தி.மு.க […]
