பெங்களூரு : பா.ஜ., சிறு தொழில் துறை அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் நடத்திய நிகழ்ச்சியில் முஸ்லிம் பிரமுகர்கள் பங்கேற்று பணமழை பொழிந்தனர்.
சிறுதொழில் துறை அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ், ஆண்டு தோறும் ஜனவரியில் முஸ்லிம்களுக்காக ‘கவ்வாலி’ எனும் இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
அது போல, இந்த ஆண்டும் தன் தொகுதியான ஹொஸ்கோட்டில் உள்ள சென்னபைரேகவுடா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நிகழ்ச்சி நடத்தினார்.
இதில் அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ், அவரது மகன் நிதிஷ் புருஷோத்தம் பங்கேற்றனர். இருவரும் முஸ்லிம்கள் அணியும் தொப்பி அணிந்திருந்தனர். அமைச்சர், உருது மொழியிலேயே பேசினார்.
நள்ளிரவு வரை நடந்த நிகழ்ச்சியில், முஸ்லிம் பாடகர் இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது பாடகருக்கு ரூபாய் நோட்டில் திருஷ்டி எடுத்து, அவர் மீது முஸ்லிம் பிரமுகர்கள் பண மழை பொழிந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement