புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல இடங்களில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. வன்னியன் விடுதி பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி யில், காளைகளின் கொம்புகள் மாடுபிடி வீரர்களை பதம்பார்ககாத வகையில், கொம்புகளில் ரப்பர் குப்பிகள் கொருத்தப்பட்டு களமிறக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகடள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் வெகுவிமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு இடங்களில் […]
