துணிவு, வாரிசு கடந்த 11 ஆம் தேதி வெளியான நிலையில் முதல் நாளில் வாரிசை பின்னுக்கு தள்ளி துணிவு முதலிடத்தைப் பிடித்தது.
அதனைத் தொடர்ந்து வாரிசுக்கு வசூல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு குடும்ப பார்வையாளர்களின் ஆதரவு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.
இந்நிலையில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகி 7 நாட்கலில் 210 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இதனையடுத்து ரியல் பொங்கல் வின்னர் என விஜய் ரசிகர்கள் மிக உற்சாகமாக இந்தத் தகவலை பகிர்ந்துவருகின்றனர். துணிவு பட வசூல் குறித்து விரைவில் தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in