வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
அலுவலகத்தில் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கலாமா?
இந்த வசனத்தை கேட்டாலே நமக்கு ‘அப்பா’ படம் தான் ஞாபகத்திற்கு வரும். இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிரனும் டா என்ற தந்தை சிறுவனை சொல்லும், வசனங்கள் அதிகமான இடங்களில் உச்சரிக்கப்படும். அதன் பிறகு சமுத்திரக்கனி அந்த சிறுவனின் திறமையை வெளிக்கொண்டு வருவதெல்லாம், அது ஒரு தனிக்கதை.
அதே படத்தில் தம்பி ராமையா ஒரு வார்த்தை சொல்லுவார் பார்த்திங்களா, என்ன வார்த்தை அது? இருக்கிற இடம் தெரியாமல் ஏம்பா இருக்கனும் என்பார் நக்கலாக? அது தான் நமக்கு தேவையானது. இருக்கிற இடம் தெரியாமல் இருந்து விட்டு போவது ஒரு சில இடங்களுக்கு வேண்டும் என்றால் நன்றாக இருக்கலாம்.

ஆனால், பெரும்பாலான இடங்களில் நம்முடைய இருப்பை அடையாளம் காண்பிப்பது மிக முக்கியமாகும். இல்லையென்றால் நீங்கள் இருந்ததற்கான தடமே இல்லாமல் போய்விடும். சிட்டிசன் படத்தில் எப்படி, ஒரு கிராமமே வாழ்ந்ததற்கான, தடம் இல்லாமல் போனதோ அதேபோலதான்!
ஆனால், நாம் அவ்வளவு சீரியசாக போக வேண்டாம்.மேட்டருக்கு வருகிறன். நாம் ஒரு அலுவலகத்தில் பணியாற்றிகிரோம்.சரியாக அலுவலக நேரத்திற்கு வருவோம்.வேலையும் நன்றாக செய்வோம். ஆனால் யாரிடமும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்போம்.
நம்முடைய boos-டம் கூட, காலை வணக்க த்தோடு சரி, அதன் பிறகு, ஈவ்னிங் வேலை முடிந்து போகும் போது தான், அவரை சந்திப்போம்.
உடன் வேலை செய்பவர்களுடன் எதுவும் பேசுவது கிடையாது. கல்ந்தாலோசிப்பது கிடையாது, அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது, நல்ல பெயர் எடுப்பது.
இப்படி நீங்கள் இருந்தால் உடனே இந்த பழக்கத்தை தூக்கி எரியுஙகள். அதுவும் கண்ணுக்கு தெரியாத தூரத்திற்கு எரிந்து விடுங்கள்.

முதலில் நீங்கள் அலுவலகத்திற்கு வந்தால், உங்கள் வருகையை உங்கள் Boss-க்கு அல்லது முதலாளிக்கு தெரியப்படுத்துங்கள்.
இன்றைக்கு உங்களுக்கான பணி என்ன என்பதை கேளுங்கள், எதை முதலில் செய்ய வேண்டும், எந்த வேலைக்கு முன்னுரிமை (priority) கொடுக்க வேண்டும், எதற்கு கொடுக்க வேண்டாம் என்பதை எல்லாம் கேட்டு, அன்றைய உங்கள் வேலையை திட்டமிடுங்கள்.
ஒவ்வொரு வேலை முடிந்த பின்னும், சம்பந்தப்பட்ட நபர்களிடம் தெரியப்படுத்துங்கள். அது தொடர்பான ஆலோசனை கேளுங்கள்.
ஒரு சில வேலைகள் கடினமாக இருந்தால், அது பற்றி சொல்லி, அதை அதற்கு தகுதியான நபர்களிடம் கொடுக்க சொல்லுங்கள். எதையும் வெளிப்படையாக பேசுங்கள். உங்களுக்கும் உங்கள் பாசுக்குமான தொடர்பு நகமும், சதையும் போல் இருக்க வேண்டும்.
அப்போது தான் ஒரு அலுவலகத்தில் நீங்கள் இருப்பதற்கான அடையாளம் தெரியும். இல்லையென்றால் நீங்கள் அலுவலகத்திற்கு வந்ததற்கு உண்டான தடமே இல்லாமல் போய் விடும். ஏனென்றால் உங்களுடைய பாசோ அல்லது முதலாளியோ, பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் உங்களை கவனிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டுதான் இருப்பீர்கள்.

அப்போது நீங்கள் உங்களுடைய வேலை நேரம் முடிந்து செல்லும் பொழுது, நீங்கள் உங்களுடைய பாஸ்ஸை சந்திக்கும் போது, நீ அலுவலகத்திற்கு வந்தியா? வேலை செய்தியா? நான் உன்னை கவனிக்கவில்லையேப்பா? என்று, நம்மை நோக்கி ஒரு கேள்வி வந்தால் நாம் எப்படி உணர்வோம்?
அதான் எப்பொழுதுமே நீங்கள் பணியாற்றும் அலுவலகத்தில் உள்ள தேவையான நபர்களோடு, சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்பிலே இருங்கள். நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருங்கள்.
அதுதான் உங்களுடைய அலுவலகத்தில் நீங்கள் சிறப்பான பணியை மேற்கொள்வதற்கான ஒரு அடையாளமாகும். இருக்கிற இடம் தெரியாமல் இருந்து விட்டுப் போகாமல், இருப்பதை தெரியப்படுத்த முயலுங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.