கனடாவில் சீக்கிய குருத்துவாராக மாற்றப்பட்ட கிறித்துவ தேவாலயம்!


கனடாவில் உள்ள பழைய தேவாலயம் சீக்கிய கோவிலாக மாற்றப்பட்டது.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள Red Deer நகரத்தில் உள்ள பழைய தேவாலயம் சீக்கிய வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டு முதல் உள்ளூர் சீக்கிய சமூகத்தின் கோரிக்கைகளுக்குப் பிறகு முதன்முதலில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

63-வது தெருவில் எண்-5911ல் உள்ள Cornerstone Gospel Chapel தேவாலயம் இப்போது குருநானக் தர்பார் குருத்வாராவாக உள்ளது, மேலும் வாரத்தில் 7 நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

கனடாவில் சீக்கிய குருத்துவாராக மாற்றப்பட்ட கிறித்துவ தேவாலயம்! | Old Church In Canada Transformed Into Sikh TempleFPJ

இது சுமார் 150 குடும்பங்கள், 250 சர்வதேச மாணவர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களுக்கு சேவை செய்யும் சீக்கிய கோவிலாக இருகிறது.

சீக்கிய சமூகம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருவதக்கவும், பிரிட்டிஷ் கொலம்பியா, கல்கரி மற்றும் ஒன்ராறியோவில் இருந்து பலர் இங்கு இடம் பெயர்ந்து வருவதாகவும், குருத்வாராவின் தலைவர் நிஷான் சிங் சந்து கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், “இது மிகவும் முக்கியமானது, இல்லையெனில் நாங்கள் ஒன்று சேர இடம் இல்லை. நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு குருத்வாராவைக் கட்ட போராடினோம்”என்று கூறினார்.

கனடாவில் சீக்கிய குருத்துவாராக மாற்றப்பட்ட கிறித்துவ தேவாலயம்! | Old Church In Canada Transformed Into Sikh TemplePC: Dan McGarvey/CBC

கல்கரி, எட்மன்டன் மற்றும் சர்ரே, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கிய சமூகத்திடமிருந்து சமூகம் நன்கொடைகளைப் பெற்றது, மேலும் 450,000 கனேடிய டொலர் மதிப்புடைய தனியார் நன்கொடைகள் வந்தது. இதன்மூலம் எந்த அடமானமும் இல்லாமல் இந்த கட்டிடம் வாங்கபட்டுள்ளது.

கடந்த மாதம் திறக்கப்பட்ட இந்த குருத்வாரா, ஒரு பெரிய அடித்தள பகுதி மற்றும் சமையலறையுடன் ஒரு பிரதான தளத்தை உள்ளடக்கியது.

மையத்தின் சமையலறை பார்வையாளர்கள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு இலவச சைவ உணவை (‘லங்கர்’) வழங்குகிறது.

கனடாவில் சீக்கிய குருத்துவாராக மாற்றப்பட்ட கிறித்துவ தேவாலயம்! | Old Church In Canada Transformed Into Sikh TempleFPJ

இந்த ஆண்டு ‘நகர் கீர்த்தனை’ அணிவகுப்பை ஏற்பாடு செய்துள்ளதாக குருத்வாராவின் துணைத் தலைவர் குர்சரண் சிங் கில் தெரிவித்தார்.

சமூக உறுப்பினர்கள் சமையலறையை மேம்படுத்தவும், சுற்றுச்சுவர் வேலி கட்டவும், நிஷான் சாஹிப் எனப்படும் சீக்கியக் கொடியை நிறுவவும் திட்டமிட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அல்பேர்டா மாகாணத்தில் உள்ள ரெட் டீர் கவுண்டி ஒரு குருத்வாரா கோரிக்கைகளை அங்கீகரித்த பிறகு சீக்கிய சமூகம் கடந்த மாதம் கட்டிடத்தை கையகப்படுத்தியது.

கனடாவில் சீக்கிய குருத்துவாராக மாற்றப்பட்ட கிறித்துவ தேவாலயம்! | Old Church In Canada Transformed Into Sikh TemplePC: Dan McGarvey/CBC



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.