திருவள்ளூர் மாவட்டம் தங்கனூரில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சேவல் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது.
தங்கனூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 2000 சண்டை சேவல்கள் பங்கேற்றுள்ளன.
நீதிமன்ற நிபந்தனைப்படி, சேவல்களுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டதுடன், சேவல்களின் கால்களில் கத்தி கட்டாமல் போட்டி நடைபெற்று வருகிறது.
இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் நூரி, கதர், ஜாவா உள்ளிட்ட பல்வேறு வகையான சேவல்கள் பங்கேற்றுள்ளன.