திண்டுக்கல்: திண்டுக்கல் கொசவபட்டியில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். விதிமுறைகளை முறையாக பின்பற்றாததால் ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். புனித உத்திரிய மாதா கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் நிறுத்த ஆணையிடப்பட்டுள்ளது.
