பிரித்தானிய காவல்துறைக்கு எதிராக…1071 அழுகிய ஆப்பிள்களை கொட்டி போராட்டம்



பாலியல் மற்றும் வீட்டு துஷ்பிரயோக வழக்குகளில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை குறிக்கும் விதமாக லண்டன் காவல்துறையின் தலைமையகத்திற்கு வெளியே 1,071 அழுகிய ஆப்பிள்களை கொட்டி ஆர்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆப்பிள்கள் கொட்டி போராட்டம்

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்கள் மற்றும் வீட்டு துஷ்பிரயோக வழக்குகளில் விசாரணையை எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை குறிக்கும் விதமாக 1071 அழுகிய ஆப்பிள்களை மத்திய லண்டனில் உள்ள மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் நியூ ஸ்காட்லாந்து யார்டு கட்டிடத்திற்கு வெளியே கொட்டி ரெஃப்யூஜ் என்ற பிரிட்டிஷ் உள்நாட்டு துஷ்பிரயோக தொண்டு நிறுவனம் போராட்டத்தில் ஈடுபட்டது.

பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோக பிரச்சாரத்தில் லண்டன் காவல்துறை அதிகாரி ஒருவர் 24 பலாத்காரம் செய்ததாக ஒப்புக் கொண்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த ஆர்ப்பாட்டம் வந்துள்ளது.

இந்த போராட்டம் வாயிலாக ரெஃப்யூஜ் “அவசர மற்றும் தீவிரமான மாற்றத்திற்கு” அழைப்பு விடுத்துள்ளது, மேலும் காவல் துறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான பிரச்சனைகளில் அனைத்து அதிகாரிகளுக்கும் கட்டாயப் பயிற்சி அளிப்பது மற்றும் கண்காணிப்பு மற்றும் ஒழுங்கு தரங்களை மேம்படுத்துவதற்கான விரைவான சட்டத்தை பரிந்துரைத்துள்ளது.

போராட்டம் தொடர்பாக ரெஃப்யூஜ் தலைமை நிர்வாக அதிகாரி ரூத் டேவிசன் பேசிய போது, இது மோசமான ஆப்பிள்கள் பற்றியது மட்டும் அல்ல, இது காவல்துறை முழுவதும் இருக்கும் முறையான பிரச்சனை என்று தெரிவித்தார்.

அத்துடன் “இந்த துஷ்பிரயோகம் செய்பவர்கள் எப்படி இவ்வளவு காலம் அதிகாரப் பதவிகளில் நுழைய அனுமதித்தார்கள்?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

 பிரித்தானிய பொலிஸார் அறிவிப்பு

பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியில், செவ்வாயன்று 1,071 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் மற்றும் வீட்டு துஷ்பிரயோக வழக்குகளை விசாரித்து வருவதாகவும், இதன் விளைவாக நூற்றுக்கணக்கானவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் மெட் பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை நடந்த இந்த போராட்டம் குறித்து காவல்துறை அறிந்து இருந்தாகவும், அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு வசதியாக அதன் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் மெட் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 1000 GMT மணிக்கு போராட்டக்காரர்கள் தாங்கள் கொட்டிய ஆப்பிள்களை எடுத்துச் சென்றனர் என்றும் தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.