மாமாகுட்டிக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி..! எலும்புக்கூடால் சிக்கியது எப்படி?

திருக்கழுக்குன்றம் அருகே எலும்புக்கூடாக கிடந்தவர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு அவரை கொலை செய்தது யார் எனவும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் கிராமத்தில்  உள்ள ஏரிக்கரை பகுதியில் நேற்று முன் தினம் கடும் துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி விவசாயிகள்  அங்கு சென்று பார்த்தனர். அப்போது மனித எலும்புக்கூடு ஒன்று சிதறிக் கிடந்தது, இதைக்கண்ட அவர்கள் உடனே திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

அங்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் எலும்புக்கூட்டை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மருத்துவ குழுவினரின் உதவியுடன் அவற்றை சேகரித்து ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வெள்ளப்பந்தல் கிராமத்தில் பம்பு செட் அருகே வசித்து வந்த ஒரு குடும்பத்தினரை சில தினங்களாக காணவில்லை என்று தகவல் கிடைத்தது. திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் காணாமல் போன குடும்பத்தினரை தேடி கண்டு பிடித்தனர். 

அப்போது சித்ரா என்ற இளம்பெண் தானும், தன்னுடைய ஆண் நண்பர் சக்திவேல் என்பவரும் சேர்ந்து தனது கணவர் சந்திரன் என்ற குமாரை கொன்று புதைத்ததை ஒப்புக் கொண்டார். 

5 ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவுக்கும், சந்திரனுக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டை அடுத்த மையூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த மாதம் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் சக்திவேல் சித்ரா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறிது நேரத்தில் சந்திரனும் அங்கு வர, இவர்கள் ஒன்றாக இருப்பதை கண்டு கடுமையாக சண்டை போட்டுள்ளார். இதனால் சக்திவேலுடன் இணைந்து சந்திரனை கட்டையால் தாக்கி சித்ரா கொலை செய்ததாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

அதன்பிறகு அவரது உடலை ஏரிக்கரையில் புதைத்துவிட்டு சென்றுள்ளனர். 

இதனையடுத்து சித்ரா மற்றும் சக்திவேலை போலீசார் கைது செய்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்டுத்தி பின்பு புழல் சிறையில் அடைத்தனர், மேலும்  எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட 10 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை போலீஸார் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.