சிக்ஸர் மழை! 66 பந்துகளில் 125 ஓட்டங்கள்..சுழன்று அடித்த வீரர்


பிக்பாஷ் லீக் தொடரில் ஸ்டீவன் ஸ்மித் 66 பந்துகளில் 125 ஓட்டங்கள் விளாசினார்.


வாணவேடிக்கை ஆட்டம்

சிட்னியில் நடந்து வரும் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

முதலில் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது.

ருத்ர தாண்டவம் ஆடிய ஸ்டீவன் ஸ்மித், சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.

இரண்டாவது சதம்

அவர் 56 பந்துகளில் சதம் அடித்தார். இது அவர் BBL தொடரில் அடிக்கும் தொடர்ச்சியான இரண்டாவது சதம் ஆகும்.

ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 125 ஓட்டங்கள் விளாசினார்.  

ஸ்டீவன் ஸ்மித்/Steven Smith

@Brendon Thorne/Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.