கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு கிரிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் குடும்பத்துடன் கடந்த ஜனவரி 13ஆம் தேதி பொங்கல் கொண்டாட கிராமத்திற்கு சென்றனர்.
கிராமத்தில் இருக்கும் தன்னுடைய தந்தையின் உறவினர் மகளான நாகம்மா என்பவரை கிரீஸ் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் உறவு முறைப்படி அண்ணன் – தங்கைகள். இந்த நிலையில், காதலனை பார்க்க நாகம்மா அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, காதலர்கள் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். நாகம்மாவை காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் தேடிக்கொண்டு கிரீஸ் வீட்டிற்கு சென்றபோது இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து கிரிசை கடுமையாக தாக்கியுள்ளனர். மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றனர்.
இதில் காயமடைந்த கிரிஷ் மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார். தொடர்ந்து அங்கிருக்கும் கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறு பேரை கைது செய்துள்ளனர்.