ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கு; 3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கை தயார்.!

டெல்லியில் கடந்த மே மாதம் ஷ்ரத்தா வால்கர் (28) என்ற பெண் 35 துண்டுகளாக உடலை வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் காதலன் அஃப்தாப் கைது செய்யப்பட்டார். மும்பையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லிக்கு வந்தவர்கள் தனியாக வீடெடுத்து லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர்.

ஒன்றாக வாழ்ந்தபோது ஏற்பட்ட சண்டையில் ஷ்ரத்தாவை கொலை செய்துவிட்டு அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி அதை பல்வேறு நாட்களில் அஃப்தாப் அப்புறப்படுத்தியுள்ளார். தற்போது ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கில் கைதாகியுள்ள அஃப்தாப் ஏற்கனவே போலீசில் கொடுத்த வாக்குமூலத்தை உறுதி செய்ய உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டனர்.

விசாரணையின் போது அவர் அளித்த பதில்கள் ஏமாற்றும் வகையில் இருப்பதாக கருதிய டெல்லி காவல்துறை நார்கோ சோதனை நடத்த திட்டமிட்டனர். நார்கோ என்பது பிரத்யேக ஊசியின் மூலம் ஒருவரை மயக்கமடைய செய்து கேள்விகள் கேட்கப்படும். அதன்மூலம் அவர் சுயநினைவோடு அளித்த வாக்குமூலம் நார்கோ சோதனையிலும் ஒத்துபோகிறதா என்பதை தெரிந்துகொள்ளலாம். அதன்படி, நார்கோ சோதனை மேற்கொள்ள தடய அறிவியல் ஆய்வகத்தின் குழு அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்றனர்.

நார்கோ சோதனைக்காக நரம்பு வழியாக அவருக்கு ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் மயக்க நிலைக்கு சென்ற அஃப்தாப் நார்கோ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது, ஷ்ரத்தாவை கொலை செய்ததையும், அவரை வெட்ட பல ஆயுதங்களை பயன்படுத்தியதையும் ஒப்புக்கொண்டார். ஷ்ரத்தாவின் தலையை என்ன செய்தீர்கள் என்று கேட்டதற்கு, அதை ஏற்கனவே போலீசாரிடம் கூறிவிட்டேன் என்று அஃப்தாப் தெரிவித்துள்ளார்.

இரண்டு மணி நேரம் நடந்த நார்கோ சோதனையில் அஃப்தாப் புதிதாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும் ஏற்கனவே அவர் கொடுத்த வாக்குமூலம் ஒத்துப்போனதாக போலீசார் உறுதி செய்துள்ளனர். டெல்லி காவல்துறை மெஹ்ராலி வனப்பகுதியில் இருந்து 13 உடல் பாகங்களை மீட்டுள்ளனர். ஆனால், டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்காததால் அவை ஷ்ரத்தாவின் உடல் பாகங்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

அதைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் தந்தை விகாஷ் வால்க்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ எனது மகள் கொலை செய்யப்பட்டதைப் போலவே கொலையாளிக்கும் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்’’ என்றார்.

பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்த பதிவுகள் நீக்கம்; திரிணாமுல் எம்பி சாடல்.!

இந்தநிலையில் ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை வரைவை டெல்லி போலீசார் தயாரித்துள்ளனர். 3,000 பக்க வரைவு குற்றப்பத்திரிகையில் 100 சாட்சியங்களுடன் தடயவியல் மற்றும் மின்னணு ஆதாரங்கள் உள்ளன. இந்த குற்றப்பத்திரிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.