Bigg Boss Tamil Season 6 Winner: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் இப்போது அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் இருக்கின்றனர். மூன்றும் பேரும் அவர்களின் தனித்துவமான குணங்கள் மூலம் ரசிகர்களை வென்று பிக்பாஸ் தமிழ் 6 போட்டியில் இறுதி வரை வந்துள்ளனர். அவர்களில் யார் வெற்றியாளர்? என்பதை தெரிந்து கொள்ள இணையத்தில் ஒரு போரே நடந்து வருகிறது.
அசீம் கோபம் மற்றும் தடித்த வார்த்தைகள் மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை உருவாக்கினாலும், அவர் தனித்துவமாக விளையாடியதாக கூறி அவருக்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக வாக்களித்தனர். ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் தங்களின் அமைதி மற்றும் தெளிவான அணுகுமுறைகளால் மக்களை கவர்ந்தனர். இருந்தாலும் இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. விக்ரமனுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனே டிவிட்டர் பக்கத்தில் நேரடியாக ஆதரவு கேட்டார். பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி என்றாலும் எளிய மக்களின் குரலையும், வாழ்வியலையும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பேசிக் கொண்டே இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
— dinesh (@dinadineshdsp2) January 22, 2023
அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட சமூகம் மீது அக்கறை கொண்ட பலரும் விக்ரமனுக்காக பொதுவெளியில் ஆதரவு கேட்டனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அவருக்காக வாக்களிக்குமாறு கேட்டனர். ஆனால், ஆசீம் மற்றும் ஷிவினுக்காகவும் சமூகவலைதளங்களில் பெரும் ஆதரவு குரல் எழுப்பப்பட்டது. குறிப்பாக ஆசிமுக்கு பிஆர்ஓ டீம் மறைமுகமாக வேலை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எது எப்படியோ மக்களின் வாக்குகளின் அடிப்படையில் அதிக வாக்குகளை பெற்ற அசீம் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.