பிரேம்ஜிக்கு திருமணமாகிவிட்டதா? ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வைரல் புகைப்படம்!

‘எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா’ என்கிற வசனத்திற்கு பெயர் போனவரும், பிரபல பாடகர் கங்கை அமரனின் சகோதரருமான, பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான நடிகர் பிரேம்ஜியை தெரியாதவர் என்று யாரும் இருக்க முடியாது.  நகைச்சுவை நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குகிறார்.  சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி போன்ற பல படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  43 வயதாகும் இவர் தன்னை முரட்டு சிங்கிள் என்று கூறி வளம் வருகிறார், இவரை பார்த்தாலோ அல்லது இவரது தந்தை மற்றும் சகோதரர் என யாரை பார்த்தாலும் ரசிகர்கள் பலரும் கேட்கும் கேள்வி பிரேம்ஜிக்கு எப்போது திருமணம் என்பது தான்.

இதுவரை பிரேம்ஜி திருமணம் செய்துகொண்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை, அதுமட்டுமின்றி விரைவில் பிரேம்ஜிக்கு திருமணம் ஆகும் என்று அவரது தந்தை கங்கை அமரன் கூறியிருந்தார்.  ஆனால் ப்ரேம்ஜியோ நோ மேரேஜ் தான் முரட்டு சிங்கிள் தான் என்று சொல்லி வந்தார்.  ஆனால் கடந்த வருடத்தில் பிரபல பாடகி வினைதா, பிரேம்ஜி அமரனுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ‘உன் கண்களில் நீ என்னை பிடித்து கொண்டிருக்கிறாய் பேபி, நான் என் கைகளுக்கு இடையில் உன்னுடன் நடனமாடுகிறேன்’ என்கிற கேப்ஷனையும் சேர்த்து பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார்.  இந்த புகைபபடங்கள் இணையத்தில் வைரலாகி பிரேம்ஜி-வினைதா இருவரும் காதலிக்கின்றனர் என்று பேச்சு எழுந்தது, பின்னர் இது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் வினைதா ஒரு பதிவை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.  முதல் பதிவினை பதிவிட்ட ஒரு வருடத்திற்கு பின்னர் தற்போது ப்ரேம்ஜியுடன் நெருக்கமாக இருக்கும் புகைபபடம் ஒன்றை பதிவிட்டு புருஷனுடன் மீண்டும் இணைந்துவிட்டேன் என்கிற வார்த்தையை சேர்த்து இருக்கிறார்.  அதுமட்டுமல்லாது புகைப்படத்தின் பின்னணியில் “கோபுரங்கள் சாய்வதில்லை” படத்தில் இளையராஜா இசையமைத்த “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்” எனும் பாடலையும் சேர்த்து ஒலிக்கவிட்டு இருக்கிறார்.  இதனை பிரேம்ஜியும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார், தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.