இது எனது தனிப்பட்ட விவகாரம்… திருமண உறவு குறித்து வெளிப்படையாக கலங்கிய நியூசிலாந்தின் புதிய பிரதமர்


தாம் விவாகரத்தின் விளிம்பில் இருப்பதாக நியூசிலாந்தின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஓராண்டாக பிரிந்து வாழ்கிறோம்

இது தமது தனிப்பட்ட விடயம் என குறிப்பிட்டுள்ள அவர், நியூசிலாந்து மக்கள் மதிப்பளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழில் கட்சி அவரை ஒருமனதாக தெரிவு செய்துள்ளதை அடுத்து, ஊடகங்களை சந்தித்த ஹிப்கின்ஸ், தாமும் மனைவியும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்வதை குறிப்பிட்டார்.

இது எனது தனிப்பட்ட விவகாரம்... திருமண உறவு குறித்து வெளிப்படையாக கலங்கிய நியூசிலாந்தின் புதிய பிரதமர் | Chris Hipkins Marriage Split Plea For Privacy

Mark Coote/Bloomberg

மேலும், தமது குடும்பத்துற்காக எடுத்த சிறந்த முடிவு இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து பெற முடிவு செய்தாலும், தமது மனைவி தமக்கு நெருங்கிய நண்பராகவே இருப்பார் என ஹிப்கின்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி, வெளிப்படையாக இந்த விவகாரத்தை தெரியப்படுத்துவதன் காரணம் குறித்து விளக்கமளித்த ஹிப்கின்ஸ், தமது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கு ஊடகங்களால் எந்த சிக்கலும் வரக்கூடாது என்பதே என குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண நியூசிலாந்து சிறார்கள் போன்று

அரசியல் கட்சி ஒன்றில் முக்கிய உறுப்பினராக செயல்படும் தாம், ஊடக வெளிச்சம் தமது குடும்பத்தின் மீது பதியாமல் இருக்க கடுமையாக உழைத்ததாக தெரிவித்துள்ளார்.
தமது பிள்ளைகள் இருவரும், மிகவும் சாதாரண நியூசிலாந்து சிறார்கள் போன்று வளர வேண்டும் என ஆசைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது எனது தனிப்பட்ட விவகாரம்... திருமண உறவு குறித்து வெளிப்படையாக கலங்கிய நியூசிலாந்தின் புதிய பிரதமர் | Chris Hipkins Marriage Split Plea For Privacy

Mark Coote/Bloomberg

அவர்கள் தவறு செய்ய வேண்டும், அதில் இருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும், 5 மில்லியன் மக்கள் அவர்களை கண்காணிக்கிறார்கள் என்ற நினைப்பு இல்லாமல் அவர்கள் வளர வேண்டும் என ஹிப்கின்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

தாம் பிரதமராக இருக்கும் காலம், அவர்களின் புகைப்படங்கல் பத்திரிகை மற்றும் மூடகங்களில் வெளிவராது. நியூசிலாந்து மக்கள் அதற்கு மதிப்பளிக்க வேண்டும்
எனவும் ஹிப்கின்ஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.