
சந்தானத்தின் ‛வடக்குப்பட்டி ராமசாமி'
காமெடி நடிகராக இருந்த சந்தானம் 2015ல் ஹீரோவாக மாறி தொடர்ச்சியாக ஹீரோவாக பயணித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் கிக் படம் வெளியாக உள்ளது. சில தினங்களுக்கு முன் இதன் டிரைலர் வெளியானது. இதுஒருபுறம் இருக்க மீண்டும் காமெடி வேடம் ஏற்கவும் அவர் தயாராகி வருகிறார். அஜித்தின் 62வது படத்திலும், சுந்தர் சியின் அரண்மனை 4 படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. சந்தானத்தை வைத்து ஏற்கனவே ‛டிக்கிலோனா' என்ற படத்தை இயக்கிய கார்த்திக் யோகியின் இயக்கத்தில் தான் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‛வடக்குப்பட்டி ராமசாமி' என பெயர் வைத்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதையில் தயாராகிறது. மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.