மனிதர்களால் ஏற்படும்… நம்ப முடியாத பேரழிவாக இருக்கும்: முக்கிய நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்த பில் கேட்ஸ்


மனிதனால் உருவாக்கப்பட்ட, மிகவும் ஆபத்தான அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக இருக்குமாறு பில் கேட்ஸ் அவுஸ்திரேலியாவை எச்சரித்துள்ளார்.

ஒன்றாகச் செயல்பட வேண்டும்

சிட்னியில் திங்களன்று ஆய்வாளர்கள் குழு ஒன்றை சந்தித்த பில் கேட்ஸ், அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ள ஒன்றாகச் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மனிதர்களால் ஏற்படும்... நம்ப முடியாத பேரழிவாக இருக்கும்: முக்கிய நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்த பில் கேட்ஸ் | Prepare For The Next Pandemic Bill Gates Warns

@getty

உலக நாடுகள் ஒரே அணியாக திரண்டு, கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் எதிர்கொண்ட பொருளாதார இழப்பு என்பது 10 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் எனவும், அதே அளவு தொகை எதிர்வரும் பெருந்தொற்றை எதிர்கொள்ள நாம் செலவிட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது, தடுப்பூசிகள் புழக்கத்திற்கு கொண்டுவரப்படும் முன்னரே, பாதிப்பு எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருந்த நாடு அவுஸ்திரேலியா என பாராட்டியுள்ளார்.

விரிவான பயிற்சி தேவை

மேலும், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், நாடு மற்றும் பிராந்திய அளவிலான தொற்றுநோய்க்கான தயார்நிலையில் ஒரு விரிவான பயிற்சியை நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மனிதர்களால் ஏற்படும்... நம்ப முடியாத பேரழிவாக இருக்கும்: முக்கிய நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்த பில் கேட்ஸ் | Prepare For The Next Pandemic Bill Gates Warns

@getty

மட்டுமின்றி, தமது சொத்தில் பாதியை நல்ல காரியங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாகவும், சுகாதாரம், எரிசக்தி மற்றும் கல்வியில் சமத்துவத்தை கொண்டு வர முயற்சிப்பதாகவும் பில் கேட்ஸ் உறுதியளித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.