யாழ் மாநகர புதிய மேயர் ஆர்னோல்டின் நியமனத்திற்கு எதிராக முன்னாள் யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் தரப்பினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று பிற்கல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்னோல்டிற்கு புதிய சிக்கல்
உள்ளூராட்சி மன்றங்களுக்கான சுற்றறிக்கையில், இருதடவைகள் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து வெல்ல முடியாமல் பதவியிழந்தவர் மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட முடியாது என மேற்கோள்காட்டி இவ்வாறு வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் மேயராக மீண்டும் ஆர்னோல்ட் பதவியேற்றிருக்கும் இந்த சமயத்தில், அதனை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கானது ஆர்னோல்டிற்கு புதிய சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.