விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்… மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்!

இந்தியாவின் விமான போக்குவரத்து இயக்குநரமான DGCA, விமான பயணி ஒருவரின் மோசமான நடத்தை குறித்து தகவல் தெரிவிக்காததற்காக ஏர் இந்தியா மீது மீண்டும் அபராதத்தை விதித்துள்ளது. கடந்த ஆண்டு பாரிஸ்-புது டெல்லி விமானத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் குறித்து புகார் செய்யாததற்காக டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நியூயார்க்-டெல்லி விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் நடந்த சில நாட்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அறிக்கைகளின்படி, பாரிஸ்-புது டெல்லி விமானத்தில் இரு பயணிகளின் மோசமான நடத்தை குறித்து ஏர் இந்தியா தகவல் அளிக்கவில்லை. ஒரு பயணி விமானத்தின் கழிவறைக்குள் புகைபிடித்த நிலையில் (விமானத்திற்குள் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது), மற்றொரு குடிபோதையில் பயணி ஒரு வெற்று இருக்கையில் வைக்கப்பட்டிருந்த போர்வை மீது சிறுநீர் கழித்துள்ளார்.

நியூயார்க்-டெல்லி விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவத்தை தவறாகக் கையாண்டதற்காக ஏர் இந்தியாவுக்கு DGCA முதல்முறையாக ரூ.30 லட்சம் அபராதம் விதித்த சில நாட்களுக்குள் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26, 2022 அன்று நடந்த இந்தச் சம்பவம், ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது, இதன் விளைவாக, போதையில் விமானத்தில் வயதான பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ரா, டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்து டெல்லிக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

நியூயார்க்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் நவம்பர் 26 அன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த பத்து நாட்களுக்குப் பிறகு, குடிபோதையில் ஆண் பயணி ஒரு பெண் பயணியின் போர்வையில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் பாரிஸ்-டெல்லி செக்டரில் நடந்தது. நியூயார்க்-டெல்லி விமான சம்பவம்  தொடர்பாக ஏர் இந்தியாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதம் தவிர, டிஜிசிஏ தனது கடமைகளைச் செய்யத் தவறியதற்காக ஏர் இந்தியாவின் விமான சேவை இயக்குநருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது. DGCA விமானியின் உரிமத்தையும் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.