Dhanush: தனுஷ் பற்றி பரவிய வதந்தி..முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்..!

1dhanush
ஆல்ரவுண்டர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் தனுஷ். தன் இயல்பான நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்துள்ள தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பன்முகத்திறன் கொண்டவராக விளங்கி வருகின்றார். தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பலமுகங்களை கொண்ட தனுஷ் பாலிவுட் , ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றார்.

தொடர் தோல்விகள் சமீபகாலமாக தனுஷ் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். ஜகமே தந்திரம், மாறன், அத்ராங்கி ரே என இவரது படங்கள் தொடர்ந்து OTT யில் வெளியாகி படுதோல்வி அடைந்தன. இதன் காரணமாக தனுஷ் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். எனவே தன் அடுத்த திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்தே தீர வேண்டும் இல்லையென்றால் தன் மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடும் என்பதை உணர்ந்தார் தனுஷ்.

வெற்றிப்பாதை கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த தனுஷிற்கு கடந்தாண்டு ஒரு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாகவும் ,விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படம் தனுஷை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

வதந்தி தற்போது தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வந்தன. அதாவது தனுஷ் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் இருந்து கோபமாக வெளியேறிவிட்டார் என செய்திகள் இணையத்தில் பரவின. ஆனால் அந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தனுஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் அப்போதைக்கு எடுக்கப்படவில்லை என்பதால் இரண்டு நாட்கள் அவருக்கு ஓய்வு கிடைத்துள்ளது. அந்த இரண்டு நாட்களை கழிக்க தான் அவர் சென்னைக்கு வந்தாராம். எனவே அவருக்கும் படக்குழுவினருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.