பாஜகவுக்கு ஆதரவான பதிவு.. முன்னாள் அமைச்சர் மகன் காங்கிரசில் இருந்து விலகல்..!

பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவண படத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மகன் காங்கிரசில் இருந்து இன்று விலகி உள்ளார்.

பிபிசி நிறுவனம் பிரதமர் மோடியை பற்றிய ஆவணப் படம் ஒன்றை இரண்டு பகுதிகளாக வெளியிட்டது. அதில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி விமர்சிக்கப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காலனி மனப்பான்மையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மகனான அனில் அந்தோணி, இந்திய அமைப்புகளின் மீதுள்ள பிபிசியின் பார்வையானது, இந்திய இறையாண்மையின் வலிமையை குன்றச் செய்து விடும்” என தனது ட்விட்டரில் பதிவிட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு, எதிர்க்கட்சியான ஆளும் பாஜகவுக்கு ஆதரவான அவர் பதிவால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அவர் திடீரென காங்கிரசில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் இன்று வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், “காங்கிரசில் உள்ள எனது பதவியில் இருந்து விலகி உள்ளேன். பேச்சுரிமைக்காக போராடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எனது ட்வீட்டை நீக்கும்படி கூறி, சகித்து கொள்ள முடியாத அளவுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனால், அதற்கு நான் மறுத்து விட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, தனது பதவி விலகல் கடிதம் ஒன்றையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.