இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி இன்று: தொடரை வெல்லுமா இந்தியா?

India vs South Africa : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டம், இன்று நடைபெறுகிறது. ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, இப்போட்டியில் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்ற முழு முனைப்புடன் களமிறங்குகிறது. முதல் போட்டியில் ரோகித் மற்றும் விராட் கோலியின் அற்புதமான ஆட்டமும், குல்தீப் யாதவின் சூப்பரான சுழற்பந்துவீச்சும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

Add Zee News as a Preferred Source

போட்டி இடம், நேரம் மற்றும் நேரலை விவரங்கள்

இந்த முக்கியமான இரண்டாவது ஒருநாள் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1:30 மணிக்குத் தொடங்குகிறது. இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் உள்ள சேனல்களிலும், அதாவது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட சேனல்களில் பார்க்கலாம். மொபைலில் ஜியோ சினிமா (JioCinema) செயலியிலும் நேரலையாகக் கண்டு ரசிக்கலாம். மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

வானிலை மற்றும் பிட்ச் நிலவரம்

ராய்ப்பூரில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை. இந்த மைதானத்தின் பிட்ச் பொதுவாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இரண்டுக்கும் சாதகமாகவே இருக்கும். ஆட்டத்தின் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆட்டம் செல்லச் செல்ல சுழற்பந்து வீச்சாளர்களுக்குப் பிட்சில் இருந்து கிரிப்பும் கிடைக்கும். எனினும், இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளதால், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு இது சாதகமாக அமையும். இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச முடிவெடுக்கலாம்.

இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம்

இந்திய அணியின் மிகப்பெரிய பலம், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஃபார்முக்கு திரும்பியுள்ளதுதான். முதல் போட்டியில் இவர்களின் பார்ட்னர்ஷிப் மிகப்பெரிய ஸ்கோரை அமைக்க உதவியது. மேலும், குல்தீப் யாதவின் அபாரமான சுழற்பந்துவீச்சு மற்றும் ஹர்ஷித் ராணாவின் துல்லியமான பவுலிங் இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். இருப்பினும், மிடில் ஆர்டர் பேட்டர்களின் ஃபார்ம் கவலையளிக்கிறது. 

தென்னாப்பிரிக்க அணியின் பலம் மற்றும் பலவீனம்

தென்னாப்பிரிக்கா அணியின் பலம் என்பது அவர்களின் ஆல்-ரவுண்டர் வரிசைதான். மார்கோ ஜான்சென் போன்ற வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறந்து விளங்குகின்றனர், இது கீழ் வரிசை பேட்டிங்கை பலமாக்குகிறது. முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தாலும், டி காக் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் விரைவில் ஃபார்முக்கு வர வாய்ப்புள்ளது. அணியின் பலவீனமாக, முதல் போட்டியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் ரைக்கிள்டன், டி காக், மார்க்ரம் சொற்ப ரன்களில் வெளியேறியது ஒரு பின்னடைவாகும். அத்துடன், வேகப்பந்து வீச்சாளர்கள் லுங்கி இங்கிடி உள்ளிட்டோர் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் திணறுவதும் அவர்களுக்குச் சவாலாக உள்ளது.

இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்

இந்தியா: ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜூரேல்.

தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா, ஒட்னீல் பார்ட்மேன், கார்பின் போஷ், மாத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரேவிஸ், நாண்ட்ரே பர்கர், க்வின்டன் டி காக், டோனி டி சோர்சி, ரூபின் ஹெர்மன், கேசவ் மஹராஜ், மார்கோ ஜான்சென், எய்டன் மார்க்ரம், லுங்கி இங்கிடி, ரியான் ரைக்கிள்டன், பிரெனலன் சுப்ராயன்.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.