மணிப்பூர்: பாஜக மாநில நிர்வாகி சுட்டுக்கொலை – சரணடைந்த குற்றவாளி; மேலும் ஒருவர் கைது

மணிப்பூர் பா.ஜ.க மாநிலப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் லைஷ்ராம் ரமேஷ்வர் சிங் (50). இவர் தௌபல் மாவட்டத்தை சேர்ந்த இவர், நேற்று க்ஷேத்ரி லைகாய் பகுதியில் உள்ள அவரின் இல்லத்தின் முன் காலை 11 மணியளவில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது பதிவு எண் இல்லாத காரில் வந்த இருவர், அவரை துப்பாக்கியால் சுட்டதில் அவரின் மார்பில் குண்டு பய்ந்தது. உடனே அக்கம் பத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாஜக தலைவர் லைஷ்ராம் ரமேஷ்வர் சிங்

அதைத் தொடர்ந்து, இது தொடர்பான புகாரை பதிவு செய்த காவல்துறை, சம்பவம் நடந்த சில மணி நேரங்களில், வாகனத்தை ஓட்டியவராக கருதப்படும் பிஷ்னுபூர் மாவட்டம் கெய்னோவைச் சேர்ந்த நௌரெம் ரிக்கி பாயிண்டிங் சிங் என்ற நபர் கைது செய்யப்பட்டார். மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான அயெக்பாம் கேஷோர்ஜித் (46) என அடையாளம் காணப்பட்டவரை கைது செய்ய காவல்துறை தேடுதல் வேட்டையை தொடங்கியது. அவருக்கு மக்கள் அடைக்கலம் வழங்கக் கூடாது எனவும், குற்றவாளி தானாக வந்து சரணடையுமாறும் காவல்துறை எச்சரித்தது.

இதற்கிடையே முக்கிய குற்றவாளி இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கமாண்டோ வளாகத்தில் காவல்துறையில் சரணடைந்தார். அவர் ஹாபாம் மராக்கைச் சேர்ந்தவர் என்பதும் அவரிடம் இருந்து 32 ரக உரிமம் பெற்ற துப்பாக்கி, ஒன்பது தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்த விசாரணையில், “கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தௌபல் காவல்துறை கண்காணிப்பாளர் ஹவ்பிஜம் ஜோகேஷ்சந்திரா தெரிவித்திருக்கிறார்.

துப்பாக்கி சூடு

மணிப்பூர் மாநில பா.ஜ.க மாநில துணைத் தலைவர் சிதானந்த சிங் செய்தியாளர்களிடம், “இந்த கோழைத்தனமான செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.