மும்பை :மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள மல்வானியில், கள்ள நோட்டுகளை பரிமாற்றம் செய்வது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் மேற்கொண்ட சோதனையில், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளுடன் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன் கூட்டாளி குறித்து தகவல் அளித்தார்.
இதையடுத்து, பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டை சோதனையிட்டதில், 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவரிடமிருந்தும் 1,796 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளும், 2,000 ரூபாய் 500 நோட்டுகளும், 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் தலா ஐந்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மதிப்பு 19 லட்சம் ரூபாயாகும். இதையடுத்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement