திருவனந்தபுரம், கேரளாவில், பலாத்கார குற்றவாளி, பாதிக்கப்பட்ட 16 வயது மைனர் சிறுமியை ரகசிய திருமணம் செய்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தின் நெடுமங்காடு பனவூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, 23 வயது இளைஞர் அமீர் 2021ல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து அமீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின் ஜாமினில் வந்த அமீர், தான் பலாத்காரம் செய்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அவரது குடும்பத்தினரிடம் வற்புறுத்தினார். இதையடுத்து, சமீபத்தில் அச்சிறுமிக்கும், அமீருக்கும் திருமணம் நடந்தது.
இதுகுறித்து கேள்விப்பட்ட சிறுமி படிக்கும் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அமீர், சிறுமியின் தந்தை, திருமணம் செய்து வைத்த மசூதியின் மதகுரு ஆகியோர் மீது, குழந்தை திருமண தடுப்பு சட்டம், ‘போக்சோ’ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement