Radha Ravi: வில்லன் நடிகரா இருந்தாலும்… குழந்தை மனசுங்க ராதாரவிக்கு!

நடிகர் ராதாரவி ஹாலிவுட் நடிகர் போல் போட்டோ ஷூட் நடத்தியதன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

நீங்காத இடம்தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகர் ராதாரவி. தமிழ் சினிமாவில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ராதா ரவி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலைலயாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
​ பிரேம்ஜி பொண்டாட்டி பத்தி இது தெரியுமா?​
சர்ச்சை பேச்சுரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சரத்குமார் என டாப் நடிகர்கள் பலருக்கும் வில்லனாக நடித்து மிரட்டியிருக்கிறார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார் நடிகர் ராதா ரவி. தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள ராதா ரவி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்திருக்கிறார். நடிகர் ராதாரவி அடிக்கடி சினிமா பிரபலங்கள் குறித்து பேசி சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார். குறிப்பாக நயன்தாரா குறித்தும் சின்மயி குறித்தும் அவர் பேசிய பேச்சு பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த நடிகர் ராதா ரவி தற்போது டப்பிங் யூனியன் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
​ Kamal Haasan: பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடிகளா? ​
வித்தியாசமான கெட்டப்பில்இந்நிலையில் நடிகர் ராதா ரவி சமீபத்தில் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. கோட் சூட் அணிந்து ஹாலிவுட் வில்லன்களை போல் மிரட்டியிருந்தார் ராதா ரவி. ராதா ரவியின் அந்த போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது. லைக்ஸ்களையும் குவித்தது. இந்நிலையில் நடிகர் ராதா ரவி திடீரென அப்படி ஒரு ஷூட்டை நடத்திய காரணத்தை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்
​ Thalapathy Vijay, Keerthy Suresh: ‘சத்தியமா அறைஞ்சிடுவேன்’.. அந்த விவகாரத்தால் கொதிக்கும் விஜய் ரசிகர்கள்!​
பேத்தியின் ஆசைஇந்த மாடர்ன் லுக் போட்டோ ஷூட் மூலம் தனது பேத்தியின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறாராம் நடிகர் ராதா ரவி. திரைத்துறையில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வரும் ராதா ரவியின் பேத்தியான பவித்ரா சதீஷுக்கு, தனது தாத்தா ராதா ரவிக்கு ஆடை வடிவமைத்து கொடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். இந்நிலையில் தான் வடிவமைத்த ஆடையை அணிந்து போட்டோ ஷூட் நடத்துமாறு கேட்டுள்ளார் தனது தாத்தா ராதா ரவியிடம் கேட்டுள்ளார் பவித்ரா சதீஷ்.​ Yashika Annand: நட்ட நடு ரோட்டில் அப்படி ஒரு போஸ்.. யாஷிகாவால் சூடாகும் இணையம்!​
குழந்தை மனசுங்கபேத்தியின் ஆசைக்காக மறுப்பு தெரிவிக்க மனம் வராத நடிகர் ராதா ரவி, பவித்ரா சதீஷ் பிரத்யேகமாக வடிவமைத்த ஆடைகளை அணிந்து கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள், வில்லன் நடிகராக இருந்தாலும் அவரும் மனிதர்தான். அவருக்கும் குழந்தை மனசு உள்ளது, பேத்தியின் ஆசையை உடனே நிறைவேற்றிவிட்டாரே என புகழ்ந்து வருகின்றனர். அரசியலில் தீவிரமாக உள்ள நடிகர் ராதா ரவி தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

​ Kamal Haasan: அறம் எங்கே செல்லுபடியாகும்… டிவிட் போட்டு வாங்கிக்கட்டும் கமல்!​
Radha Ravi

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.