`அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்'- அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நடத்தப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி, இன்று சென்னை கடற்கரை சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்க அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சென்னையில் ஜி-20 கல்வி கருத்தரங்கில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொள்கின்ற போது தேசிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசுக்கு இருக்கக்கூடிய ஆட்சேபனைகள் குறித்து தெரிவிக்கப்படும்.  முதலமைச்சருடன் கலந்த ஆலோசனை செய்து அவரை நேரில் சந்திக்கவும் திட்டமுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கத்தில் மதுரையில் கட்டப்பட்ட வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்படும்” என்று கூறினார்.

image
தொடர்ச்சியாக, “அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின்  கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆசிரியர்களின் அரசு ஊழியர்களின் ஆதரவு கிடைக்குமா” என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு, “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதி சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதர கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆகவே ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும்” என்று கூறினார். 
தமிழக மாற்றுத்திறனாளிகள் பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நடத்தப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நடந்த பேச்சுவார்த்தை முடிவில் போராட்டம் கைவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.