கோவில் நகரங்களில் ஒன்று காஞ்சிபுரம். இங்கு உலக புகழ் பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
இந்தக் கோவில் வளாகத்தில் செயல் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் அலுவலராக வேதமூர்த்தி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8 ஆம் தேதி கோவிலில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்ட வேதமூர்த்தியை, அந்த பெண் ஊழியர் அடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் கோவில் ஊழியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலின் செயல் அலுவலர் வேதமூர்த்தியை, திருச்செந்தூர் கோவிலுக்கு பணியிட மாற்றம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், கோவிலில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் கோவில் அலுவலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.