கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் டிரைவர், கண்டக்டருக்கு விருது| Award to bus driver, conductor who saved cricketer Rishabh Pant

டேராடூன்: விபத்தில் சிக்கிய போது, கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் உட்பட 4 பேருக்கு உத்தரகாண்ட் முதல்வர் இன்று(ஜன.,26) விருது வழங்கி கவுரவித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், உத்தரகண்டில் இருந்து டில்லிக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ரூர்க்கி அருகே அவரது கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதியதில் கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார்.

அப்போது அவருக்கு, அங்கு இருந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் முதலுதவி அளித்தனர். இவர்களை ரிஷப் பண்ட் ரசிகர்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் உட்பட நான்கு உத்தரகாண்ட் முதல்வர் இன்று(ஜன.,26) விருது வழங்கி கவுரவித்தார். அவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.