தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒன்றிய பாஜக அரசை கடுமையாக சாடி வருபவர்களில் முன்னனியில் இருப்பவர் கேசிஆர். மேலும் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாம் கூட்டணியை உருவாக்க பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறார்.
அதேபோல் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. தெலங்கானா அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடைபெறும். ஆளுநரும் முதல்வரும் இதில் பங்கேற்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2022ல் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தலைநகரில் வழக்கமான குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது. முதல்வர் – ஆளுநர் இடையிலான விரிசல் தற்போது அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டும் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி தலைநகரில் வழக்கமான குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது.
ராஜ்பவனில் விழாவை தனியாக நடத்திக் கொள்ளலாம் என ஆளுநர் தமிழிசைக்கு தகவல் அனுப்பியது. இதற்கு காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநரை தவிர்ப்பதற்காகவே விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு பரவியது.
இந்நிலையில் அரசின் முடிவுக்கு எதிராக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீநிவாஸ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். கொரோனா தொற்றே இல்லாத ஒரு மாநிலத்தில் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக குடியரசு தின விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம் இரு தரப்புவாதங்களையும் கேட்டது. இறுதியில் ஒன்றிய அரசின் நிபந்தனைகளை பின்பற்றி குடியரசு தின விழா நடத்தியே தீர வேண்டும் என தெலங்கானா அரசுக்கு உத்தரவிட்டது. இது தெலங்கானா அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டுது.
இந்தநிலையில் இன்று நாடுமுழுவதும் 74வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதேபோல் தெலங்கானாவில் ஆளுநர் மாளிகையில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் அதில் முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் சந்திரசேகர ராவ் கலந்து கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை.
ஏனெனில், 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில், இந்த முறை பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் சிறந்த முறையில் குடியரசு தின விழா நடைபெற வேண்டும் என நான் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், அதற்கு அவர்கள் பதில் தரவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன் அவர்களிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.
அதில், கவர்னர் மாளிகையில் மட்டுமே நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்து கொள்வாரா? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். தெலுங்கானா வரலாற்றில் அரசியல் சாசனம் மதிக்கப்படவில்லை என எழுதப்படும்.
கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் தடை நீக்கம்; சினிமா துறை குறித்து கடும் சாடல்.!
தெலுங்கானா அரசு, குடியரசு தின நடவடிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. அவர்களிடம் பொது நிகழ்ச்சி எதுவும் இல்லை. ராஜ்பவனில் நான் கொடியேற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஒன்றிய அரசின் நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி) வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததால், பொதுப் பங்கேற்பு இல்லை’’ என அவர் தெரிவித்துள்ளார்.