சென்னை: 74-வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில், அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட அலங்கார ஊர்திகளில், காவல் துறையின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின அணிவகுப்பில் அரசின் திட்டங்களை விளக்கி பல்வேறு துறைகளில் அலங்கார ஊர்திகள் அணி வகுத்து வந்தன.
இதில் காவல்துறை அலங்கார ஊர்திக்கு முதல் பரிசும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் அலங்கார ஊர்திக்கு இரண்டாம் பரிசும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அலங்கார ஊர்திக்கு ( அரசின் திட்டங்கள்) 3 வது பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.