சட்டவிரோதமாக நுழைய முயன்ற 38 இலங்கையர்களை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்


கடல் வழியாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 38 இலங்கையர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் 38 இலங்கை பிரஜைகளை நேற்று (புதன்கிழமை) மாலை விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியதாக இலங்கை கடற்படை தெரிவித்தார்.

64 இலங்கையர்கள் ஏற்றிச்செல்லப்பட்டனர்

இலங்கை கடற்படையினர் வெளியிட்ட தகவலின்படி, நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த வருடம் டிசம்பர் 1-ஆம் திகதி ஐந்து பணியாளர்களுடன் புறப்பட்டு, IMUL-A-0532 CHW என்ற இலக்கம் கொண்ட பலநாள் மீன்பிடி இழுவை படகு, டிசம்பர் 13-ஆம் திகதி புத்தளம், பத்தலங்குண்டு ஆகிய பகுதிகளிவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய 64 பேரை ஏற்றிச்சென்றனர், பின்னர் அதில் சிலர் 3 டிங்கி படகுகளுக்கு மாற்றப்பட்டனர்.

சட்டவிரோதமாக நுழைய முயன்ற 38 இலங்கையர்களை திருப்பி அனுப்பிய பிரான்ஸ் | 38 Lankans Enter Reunion Island France RepatriatedRepresentative Image PC: Sky News

அதனைத் தொடர்ந்து, பலநாள் மீன்பிடி இழுவைப்படகு டியாகோ கார்சியா தீவை நோக்கிச் சென்றது. அங்கு அவர்கள் டிசம்பர் 30-ஆம் திகதி பிரித்தானிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

ரீயூனியன் தீவுக்கு சென்ற டிங்கி படகுகள்

ஆனால், டிங்கி படகுகள் மனிதக் கடத்தல்காரர்கள் மூலமாக பிரெஞ்சுப் பிரதேசமான ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக சென்றன. அவர்கள் அனைவரையும் ஜனவரி 14 அன்று ரீயூனியன் தீவின் அதிகாரி அவர்களை கைது செய்தனர்.

பின்னர், அவர்கள் ரீயூனியன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சட்டவிரோத குடியேற்றவாசிகளின் குழுவை ஜனவரி 25 அன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பினர்.

38 இலங்கையர்கள் கைது

கைது செய்யப்பட்டவர்களில் படகு குழாமைச் சேர்ந்த 3 பேர் உட்பட 33 ஆண்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களும், 18 வயதுக்குட்பட்ட 2 ஆண்கள் மற்றும் 1 பெண் ஆகியோர் அடங்குவர்.

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இந்த கடத்தலுக்கு தலைமை தாங்கிய கல்பிட்டி மற்றும் கண்டி பிரதேசங்களில் கடத்தல்காரர்கள் நபர் ஒருவருக்கு குறைந்தது 4 இலட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை தொகையை வசூலித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.