பாலின பாகுபாட்டிற்கு எதிராக..பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் அறிவிப்பு


பாலின பாகுபாட்டிற்கு எதிரான தேசிய நாளாக ஜனவரி 25ஆம் திகதி மாறும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார்.


அறிக்கை முடிவு

கடந்த 23ஆம் திகதி அன்று சமத்துவத்திற்கான உயர் கவுன்சில் (HCE) வெளியிட்ட அறிக்கையின் முடிவுகளின்படி,

MeTOO எழுச்சி இருந்தபோதிலும் பிரான்ஸில் இளைஞர்கள் இடையே பாலின பாகுபாடு, ஆண்மைவாத பிரதிபலிப்பு இருப்பதாக தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, HCE-யின் தலைவரான சில்வி பியெர்ரே-ப்ரரோஸ்ஸோலெட் பாலின வேறுபாட்டிற்கு எதிரான தினத்தை வரவேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சுயாதீன ஆலோசனைக் குழு தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், பாலின பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சரத்தில் பங்கேற்றது.

பாலின பாகுபாட்டிற்கு எதிராக..பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் அறிவிப்பு | Macron Announce Jan 25Th Day Against Sexism

@AFP

மேலும், பிரான்ஸில் பாலின பாகுபாடு குறையவில்லை என்றும், மாறாக அதன் சில வன்முறை வெளிப்பாடுகள் மோசமாகி வருவதால் இளைய தலைமுறையினர் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் HCE கவலை தெரிவித்தது.


மேக்ரானின் அறிவிப்பு

இந்த நிலையில் ஜனாதிபதி மேக்ரான் இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவர் அறிவிப்பு ஒன்றை ட்விட்டர் வாயிலாக வெளியிட்டார்.

அவரது பதிவில்,

‘ஒவ்வொரு ஜனவரி 25ஆம் திகதியும் பாலின பேதத்திற்கு எதிராக போராட Collectif Ensemble Contre le Sexisme கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறது.

மிகவும் சமத்துவ சமுதாயத்திற்காகவும், இந்த போராட்டம் அனைவரது வேலையாகவும் இருப்பதால், ஜனவரி 25ஆம் திகதி இப்போதிலிருந்து பாலின பாகுபாட்டிற்கு எதிரான தேசிய நாளாக மாறும்’ என தெரிவித்துள்ளார்.

80 சதவீத பெண்கள் தங்கள் வாழ்நாளில் தங்கள் பாலினத்தின் காரணமாக குறைவாக நடத்தப்பட்டதாக உணர்ந்ததாக கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இமானுவல் மேக்ரான்/Emmanuel Macron

@Ludovic Marin/AFP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.