மாநிலங்களின் பன்முகத்தன்மை: குடியரசு தின அணிவகுப்பில் தெரிந்த உண்மை| The Republic Day parade showcased the diversity of the states

புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் கடமைப்பாதையில் நடக்கும் அணிவகுப்பில் மாநிங்களின் கலாசாரத்தை விளக்கும் வகையில் பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன.

இந்த அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் 6 அலங்கார ஊர்திகள் என 23 ஊர்திகள் கலந்து கொண்டன. இவை இந்தியாவின் கலாசார பாரம்பரியம், பொருளாதாரம், வளர்ச்சி மற்றும் தேச பாதுகாப்பை ஊக்கப்படுத்துவதாக இருந்தன.

குடியரசு தின விழாவில், மகளிர் சக்தியை குறிக்கும் வகையில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி அணிவகுத்தது. அவ்வையார், தேவதாசி முறையை ஒழிக்க போராடிய சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், இந்தியாவின் முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி, இயற்கை விவசாயி பாப்பம்மாள், பரதநாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி, வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரது உருவங்கள் ஊர்தியில் இடம்பெற்றிருந்தன.

latest tamil news

ஹரியானா மாநில அரசின் அலங்கார ஊர்தியானது, பகவத் கீதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது. கடவுள் கிருஷ்ணர், அர்ஜூனருக்கு கீதா உபதேசம் செய்வது போல் அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டது.

latest tamil news

ஆற்றல், விளையாட்டு, கலாசாரம், வரலாறு மற்றும் தொல்லியல் ஆகியவற்றின் அடிப்படையில் சுற்றுலாவின் திறமையை விளக்கும் வகையில் அருணாச்சல பிரதேசத்தின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது.

latest tamil news

அசாம் மாநில அரசின் ஊர்தியில் அஹோம் வீராங்கனை லசித் போர்புகன் மற்றும் மா கமக்யா கோவில் அமைப்பும் இடம்பெற்றது.

latest tamil news

சுத்தமான பசுமை சக்தியில் திறமையான குஜராத் என்ற தலைப்பில், அம்மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விளக்கும் வகையில் குஜராத் அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது.

latest tamil news

ஜார்கண்டின் தியோகரில் உள்ள பைத்யநாத் கோவின் மாதிரியை விளக்கும் வகையில் அம்மாநிலத்தின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்றது. அதன் முகப்பில், பிர்சா முன்டா மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது.

latest tamil news

ஜம்மு காஷ்மீர் அலங்கார ஊர்தியில் அமர்நாத் பனிலிங்கம், துலிப் கார்டன் ஆகியவை இடம்பெற்றன.

latest tamil news

பெண்கள் சக்தி மற்றும் பெண்களின் பாரம்பரிய நடனத்தை மையப்படுத்தி, கேரள அரசின் அலங்கார ஊர்தி அணிவகுத்து சென்றது.

latest tamil news

லடாக்கின் சுற்றுலா மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், லடாக் யூனியன் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது.

latest tamil news

உத்தரகண்டின் அரசின் ஊர்தியில் கோர்பெட் தேசிய பூங்கா மற்றும் அல்மோரா ஜகேஸ்வர் தம் இடம்பெற்றது.

latest tamil news

திரிபுராவின் சுற்றுலா மூலம் வாழ்வாதாரம் மற்றும் பெண்கள் பங்களிப்புடன் இயற்கை விவசாயம் ஆகியவற்றின் அடிப்படையில் அம்மாநில அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது.

உ.பி., மஹாராஷ்டிரா, கர்நாடகா மேற்கு வங்க மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.